முறைமை விருத்திச் செயலொழுங்கு
தகவல் முறைமை விருத்தியில் பல்வேறு முறைகள் பயன்படுத்தப்படும். இவற்றுள் முறைமை விருத்தி ஆயுள் வட்டம் (System development life cycle) பிரதானமானதாகும்.
முறைமை விருத்தி வாழ்க்கை வட்டம்
இது பல படிகளைக் கொண்டது.
1. தேவைகளை இனங்காணல் (Identification of
requirements)
2. தீர்வினை வடிவமைத்தல் (Designing the solution)
3. தீர்வினைக் குறிமுறைப்படுத்தல் (Coding of the solution)
4. தீர்வினைச் சோதித்துப் பார்த்தலும் தவறு நீக்குதலும் (Testing and debugging)
5. தீர்வினை நடைமுறைப்படுத்தல் (Deployment of the solution)
6. முறைமையைப் பராமரித்தல் (Maintenance of the system)
முறைமையொன்றை நிறுவிப் பயன்படுத்தும்
போது புதிய தேவைகள் ஏற்படலாம். அவ்வாறான
சந்தர்ப்பங்களில் முதலாம் படிமுறைக்கு
மீண்டும் சென்று தேவையை நிறைவு செய்வதற்கு இந்த செயன்முறையை மீளச் செய்ய வேண்டும்.
முறைமை விருத்தி ஆயுள் வட்டத்தின் படிகள்
1. தேவைகளை இனங்காணல்
(Identification of
requirements)
இதன்போது ஏற்கனவே உள்ள கைமுறைத் தகவல் முறைமையினையோ அல்லது தயாரிக்கப்பட வேண்டிய தகவல் முறைமை பற்றியோ நன்கு ஆராய்வது அவசியமாகும். புதிய முறைமையின் நோக்கம், அனுகூலங்கள், வினைத்திறன் ஆகியன பற்றிய எழுத்து மூலக் குறிப்புகள் பேணப்படும். நிறுவனப் பணியாட்கள், முறைமை விருத்தி நுட்பவியலாளர்கள் இருசாராரும் இணைந்து இதனை மேற்கொள்வர்.
இந்தப் படியில்,
முறைமைப் பகுப்பாய்வாளரினால் (System
analyst) ஏற்கனவே உள்ள முறைமை பற்றி விவரமாக ஆராயப்பட்டு புதிதாக
உள்ள தேவைகள் இனங்
காணப்படும். பயநர் தேவையை நிறைவேற்றுவதற்கென தகவல்களை
சேகரிக்கவேண்டி ஏற்படும். தகவல்கள்
பல வழிகளில்
சேகரிக்கப்படலாம். அவற்றுட் சில
வருமாறு.
1) அவதானிப்பு (Observation)
2) நேர்காணல் (Interview)
3) வினாக்கொத்து (Questionnaire)
4) பதிவுகள், மற்றும்
ஆவணங்களை ஆராய்தல் (Document
sample collection)
5) மூலவகைமாதிரி உருவாக்கம்
(Prototyping)
1) அவதானிப்பு
முறைமை விருத்தி ஆரம்ப
நிலையில் நடைமுறையிலுள்ள உள்ள
முறைமையை அவதானிப்பதன் மூலம்
தகவல் சேகரிக்கப்படும். இது
புதிய முறைமை குறித்து எடுகோள்களை மேற்கொள்வதற்காக
முக்கியமானது.
உதாரணம் : நூலகத்துக்குச் சென்று, நூலகர் நூல்களை விநியோகிக்கும் விதத்தை அவதானித்தல்.
2) நேர்காணல்
உத்தேச முறைமையினைப் பயன்படுத்த
உள்ளவர்களினை நேருக்குநேர் சந்தித்து
வினாக்களைக் கேட்பதன் மூலம்
கிடைக்கும் விடைகள் பகுப்பாய்வு
செய்யப்படும். பயனர்களின் மனப்பாங்கு
தொடர்பாக வெளிப்படையாக அறிதல்
இங்கு மேற்கொள்ளப்படும்.
உதாரணம் : நூலகரைச் சந்தித்து அவரிடம் நேர்காணல் மேற்கொள்ளல்.
3) வினாக்கொத்து
கட்டமைப்பு வினாக்கள் மூலம், எழுத்து மூல
விடைகள் பெறப்பட்டு அவை
பகுப்பாய்வு செய்யப்பட்டு தகவல்கள்
பெறப்படும்.
உதாரணம் : தயாரிக்கப்பட்ட வினாக்கொத்தை நூலகரிடம் கொடுத்து அவற்றைப் பூர்த்தி செய்யச் செய்தல்.
4) அறிக்கை, கோவைகளைப் பரீட்சித்தல்
நிறுவனத்திலுள்ள அறிக்கைகள், கோவைகள் ஆகியவற்றை அவதானித்து
தகவல் பெறப்படும்.
உதாரணம் : நூலக அறிக்கைகள், நூலக அட்டைகள் ஆகியன தொடர்பான தகவல்களைப் பெறுதல்.
5) மூலவகை மாதிரியைக் காட்சிப்படுத்தல்
நிறுவ உள்ள முறைமையின் மாதிரியை பணிக்குழுவினருக்குக் காட்சிப்படுத்தி அவர்களது கருத்துக்கள்
பெறப்படும்.
உதாரணம் - புதிய நூலக முறையிலுள்ள விடயங்களைக் காட்சிப்படுத்த, அறிக்கைகள், மாதிரிகள் ஆகியவற்றைக் காட்டுதல்.
2. தீர்வினை வடிவமைத்தல் (Designing the solution)
இது முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்டத்திலுள்ள ஏனைய முறைகளை விட வேறுபட்டதாகும். முறைமையின் பல்வேறு
பட்ட விடயங்கள் இங்கு
திட்டமிடப்படும். இதன்போதான செயற்பாடுகள்
சில வருமாறு.
1. மென்பொருளை அறிமுகஞ்செய்தல், மென்பொருள் கட்டமைப்பை (Software
architecture)
இனங்காணல்
2. பயநர் இடைமுகம் (User interface) காட்சியளிக்கும் விதமும் தரவுகளைச்
சேமித்தலும்
3. பிரதான வன்கூறுகள் மற்றும் அவற்றிலுள்ள கூறுகளை இனங்காணல்
4. ஒவ்வொரு உபதொகுதிக்கும் இடையிலான பொருத்தப்பாட்டை இனங்காணல்
5. முறைமையைச் செயற்படுத்தப் பொருத்தமான மென்கூறுகள், வன்கூறுகள் ஆகிய வற்றைத் தீர்மானித்தல்
6. மென்பொருள், தரவுத் தேக்ககம், இடைமுகம் ஆகிய உட்கட்டமைப்புகளைத் தீர்மானித்தல்
7. சோதனைத் திட்டத்தினை (Test plans) மேற்கொள்ளல்
3. தீர்வினை குறிமுறைப்படுத்தல் (Coding the solution)
செய்நிரலுக்கு ஏற்ற கணினி மொழியைப் பயன்படுத்தி திட்டமிடப்பட்ட முறைமையைக் குறிமுறைப்படுத்தல் இந்தப் படியின் பிரதான நோக்கமாகும். குறிமுறைகள் எளிமையாகவும் வினைத்திறனாகவும் அமைவதனாலும் அவற்றை விளங்கிக் கொள்வதும் குறிமுறைப்படுத்தலும் இலகுவாகும். முறைமையை செவ்வையாகக் குறிமுறைப்படுத்துவதன் மூலம் முறைமையைப் பரீட்சித்தல், பராமரித்தல் ஆகியவற்றுக்கான செலவும் நேரமும் மீதமாகும்.
4. தீர்வினைச் சோதித்தலும் தவறு நீக்கலும் (Testing and debugging)
இப்படியின் பிரதான நோக்கம் முறைமையில் உள்ள
தவறுகளை நீக்குதலாகும். குறிமுறைத்
தவறுகள், திட்டத்
தவறுகள் அல்லது சந்தர்ப்பத் தவறுகள் இங்கு
நீக்கப்படும். இதன்மூலம் தரம்
உறுதிப்படுத்தப்படும்.
முறைமை பரீட்சிக்கப்படும் படிகள்
பல உள்ளன.
அவற்றில் சில வருமாறு:
முறைமையை சோதிக்கும் விதங்கள்
1) அலகுச் சோதனை (Unit Testing)
முறைமையின் ஒவ்வொரு கூறும்
வேறுவேறாகச் சோதிக்கப்படும். இதன்போது, குறித்த அலகில்
மேற்கொள்ளப்படும்.உள்ளீடுகளுக்கு
ஏற்ற வருவிளைவுகள் பெறப்படுகின்றதா
எனச்சோதிக்கப்படும்.
உதாரணம்- அலுவலகத்தின் நிதிக்கிளை, நிறுவனக்கிளை, ஆகியவற்றை வெவ்வேறாகச் சோதித்தல்
2) ஒருங்கிணைப்புச் சோதனை (Integration Testing)
மேற்படி சோதனையில் ஒவ்வொரு அலகும் உரிய முறையில் ஒன்றிணைக்கப்பட்டு பரீட்சிக்கப்படும். உள்ளிடப்பட்ட தரவுகளுக்கு ஏற்ப இடைமுகமானது பரீட்சிக்கப்படும்.
3) முறைமைச் சோதனை (System Testing)
இதன்போது முழுமையான முறைமைக்கும்
உரிய உள்ளீடுகளிற்கு எதிர்பார்த்த
வருவிளைவுகள் கிடைக்கப் பெற்றனவாBஎனப் பரீட்சிக்கப்படும்.
கவனம் செலுத்த வேண்டிய
சந்தர்ப்பங்கள், விருத்தி
முறைமையின் உட்செயற்பாடுகள் ஆகியன
இங்கு கருத்திற் கொள்ளப்படும்.
4) ஏற்புடைமைச் சோதனை (Acceptance Testing)
முறைமைச் சோதனைகள் அனைத்தும் பூர்த்தியாகி தவறுகள் திருத்தப்பட்ட பின்னர் இறுதியில் மேற்கொள்ளப்படும் சோதனையே ஏற்புடைமைச் சோதனை எனப்படும். இந்தச் சோதனையின்போது முறைமையினைப் பயன்படுத்த உள்ளோரிற்குமுறைமை செயற்படுத்திக் காட்டப்படும். இதன்போது பயனர்உத்தேச முறைமையை ஏற்றுக்கொள்ளவோ அல்லது மேலும் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவோ தெரிவிக்க இடமுண்டு.
Click to Read - தகவல் முறைமை Grade 11
0 கருத்துகள்